Pages

Tuesday, 16 February 2016

குடல் புண் பிரச்சனையா…? வாயுக்கோளாறா..?

இதோ இயற்கை தரும் மருந்து..!

இயற்கை நமக்கு கொடுத்துள்ள உணவுகளால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

இதோ சில இயற்கையான உணவுகளின் பலன்கள்.

தேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப்படுத்தும்.

வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.

துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

பூண்டு: வயிற்றில் உண்டாகும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர்: உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.

வெண்ணெய்: வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்.

மிளகு: ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.

பாகற்காய்: சர்க்கரை வியாதிக்கு நல்லது. வாய்நாற்றம் போக்கும். வயிற்றுப்பூச்சியை கொல்லும்.

பச்சைபட்டாணி: உடலுக்கு வலிமையும், புத்துணர்ச்சியையும் தரும். குடல் புண்களை ஆற்றும், களைப்பை நீக்கும்.

அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.

அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும்.

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.

ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்தால் குடல் புண்கள் குணமாகும்.

உளுந்தை மாவாக்கி அத்துடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் குடல் புண்கள் ஆறும்.

ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் - தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும்.

கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

சாணாக்கிக் கீரையை துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் வயிற்று புண்கள் குணமாகும்.

சோற்று கற்றாழை சாறில் பச்சை பயறை ஊற வைத்து, காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.

No comments:

Post a Comment