Pages

Monday, 15 February 2016

ஓரிதழ் தாமரை

ஏம்மாம் ஓரிதழ்த் தாமரை சமூலம்
இணைத்து மேசூரணித்து நெய்யிற்கொள்ள
சேமமா உடம்பில் நின்ற வேகமெல்லாம்
சிதைந்துமே போய்விடும் சிறுநீர்தானும்
காமமாய் குளிர்ந்துவிடும் கண் புகைச்சல்
காமாலைவரட் சியொடு கடிய பித்தம்
வாமமாயப் போய்விடு மண் டலந்தான் கொள்ளு
மகத்தான ரோகம் எல்லாம் மாறிப்போமே

- போகர் கற்பம்.

ஓரிதழ் தாமரை செடி முழுவதும் நிழலில் உலர்த்தி தூள் செய்து நெய்யில் கலந்து உண்டுவர உடம்பில் நோய் வேகமெல்லாம் தவிடு பொடி ஆகிவிடும் .உடல் சூடு தணித்து சிறுநீர் குளிர்ந்துவிடும் . கண் எரிச்சல், காமாலை, வறட்சி, பித்தம் ஆகியவை ஒரு மண்டலம் உண்டுவர தீரும். பெரிய நோய் கூட விலகி ஓடும்.

No comments:

Post a Comment